சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி!

புதன் நவம்பர் 06, 2019

சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் சீனாவின் யான் யான் கய்-ஐ எதிர்கொண்டார்.

9-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 22-ம் நிலை வீராங்கனையிடம் 9-21, 12-21 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறினார்.