சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 4 கொள்ளை நோய்கள்!!

புதன் மே 13, 2020

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன்  கூறியதாவது:-கொரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததற்குச் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்.

சீனாவின் உகானில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது.

கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 4 கொள்ளை நோய்கள் சீனாவில் இருந்து பரவி உள்ளது.கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டது.  சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான சான்றுகளை அமெரிக்கா தேடி வருகிறது என கூறினார்.