சிறைக்குள் கஞ்சா கொண்டு சென்ற சிறைக் காவலர் கைது!!

புதன் ஜூலை 24, 2019

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலர் ஒருவர் கஞ்சா போதைப் பொருள், புகையிலை மற்றும் சிகரட் என்பனவற்றை சிறைக்குள் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.


சிறைச்சாலைக்குள் குறித்த போதைப் பொருட்களை சிறைக்குள் எடுத்துச் சென்ற போது, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த சிறைச்சாலைக் காவலர்கள் அவரையும் சோதணைக்கு உட்படுத்தியிருந்தனர். 


இதன் போது அவரின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.