சிறிலங்கா அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைக்கும் ரணில்!

ஞாயிறு மே 17, 2020

எதிர்காலத்தில் சிறிலங்பாவின்  பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

 தற்போது கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாக வளர்ச்சி கணிசமாக குறைவடையும் என்பதால் முறையான திட்டங்களை வகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.