சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை அமைக்க யோசனை!

புதன் மே 15, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட  தளர்வே காரணம் எனக் குறிப்பிட்ட திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன,  பாதுகாப்பில் எவ்வாறு தளர்வு ஏற்பட்டது. ஏன் நடந்தது?  இதற்கு  பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து ஏன் விலகியுள்ளனர். என்பவை தொடர்பில்  ஆராய சகல அதிகாரங்களு​முடைய தெரிவுக் குழுவொன்றை அமைக்க சபாநாயகர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று (15) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “தேசிய வழி“ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கையெழுத்துடன்,சகல கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பது குறித்த யோசனையை  சபாநாயகரிடம்  கையளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.