சம்பள முரண்பாடுகளை நீக்க அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தை!

திங்கள் செப்டம்பர் 16, 2019

அரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில், அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாபாக அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக கல்வி ஊழியர்களின் சம்பள முரண்பாடுதொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நிதியமைச்சில் இன்று (16) இடம்பெறும். இதற்காக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவைத் துணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அதனை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சம்பள ஆணைக்குழுவின் தலைவர் என். ரனுக்கே இது குறித்து தெரிவிக்கையில், இந்த இரண்டு துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.