சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்

ஞாயிறு மே 26, 2019

நடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் மீண்டும் இந்திய பிரதமராக தெரிவுசெய்யபப்ட்டுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்கவேண்டும் என்று நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொடுள்ளார்.

“இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்களிடம் பல விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் தொடர்ந்து அரசாங்க அடக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றின் பாதிப்புக்களினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரியாதையை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தமையையும் கூட்டுறவு சமஷ்டி பற்றி குறிப்பிட்டிருந்தமையையும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச்செய்தியில் நினைவுபடுத்தியுள்ளார். இந்தியா தனது அயலவர்கள் சந்தோசமாகவும் திருப்தியாகவும் இருப்பதை உறுதிசெய்யும் நேரம் வந்திருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.