சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது !

திங்கள் டிசம்பர் 09, 2019

முந்தல் பள்ளிவாசல்பாடுவ கடற் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரு மீன்பிடி படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இரண்டு வலைகள் என்பனவும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் என்பனவும் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.