எங்கெங்கு டெட்டோல் தெளிக்க வேண்டும்!

சனி ஏப்ரல் 04, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இல்லாமல் இருப்பதற்காக சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா ஏதேனும் கோளாறுகள் உள்ளதா என பரிசிலித்து    வருகின்றனர்.

அவர்கள் அறிவுறுத்தி இருப்பது என்னவென்றால் உங்கள் இல்லத்தின் உட்புறம் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சில சொட்டு டெட்டாலை தண்ணீரில் கலந்து, கதவுகுமிழ்கள், கைப்பிடிகள், டிவி ரிமோட்கள்,, கீ போர்ட், கைபேசிகள், இரு சக்கர வாகனங்கள், குறிப்பாக அதன் கைப்பிடிகள், கார்,ஸ்டியரிங்க் என எங்கெல்லாம் நம் கைகள் படுகிறதோ அங்கே இந்த தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யவும்.

இதை தினசரி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.