இலங்கை தமிழரசுக்கட்சியின் 16,வது தேசிய மாநாடு

செவ்வாய் ஜூன் 25, 2019

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் மாவை .சேனாதிராசா தலைமையில் எதிர்வரும் 30/06/2019 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை9.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும்.

தேசிய மாநாட்டுக்கு முதல்நாள் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி மதினி நெல்சன் தலைமையில் மகளிர் அணி மாநாடு நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெறும்.

தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் 5 மணிக்கு வாலிபர் முன்னணி மாநாடு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறும்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தந்தை செல்வாவின் நினைவு தினத்தோடு நிகழ்த்தப்பட விருந்தும், ஏப்ரல்21 குண்டுத் தாக்குதல் காரணத்தால் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்குகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மத்திய குழுக்கூட்டம் மாநாட்டுக்கு முன்பாக எதிர்வரும் 28/06/2019, வெள்ளிக்கிழமை இடம்பெறும்.