இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

திங்கள் மே 18, 2020

வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக, தென்கொரியா, ஜப்பான், கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோருக்கான அனுமதி மாத்திரம் தற்போது வழங்கப்படுவதாகவும் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, அலுவலகத்தின் பிரதான அலுவலகம், சகல மாகாணங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.