இன்று தற்கொலைகள் எதிர்ப்பு தினம்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

தற்­கொ­லைக்கு எதி­ரான அமைப்­பான சுமித்­தி­ரயோவின் தன்­னார்வத் தொண்­டர் திருமதி அனுராதா சந்திரசேகரன்  வழங்கிய விசேட செவ்வி

மனிதன் மன ரீதி­யான அழுத்­தத்­திற்கு ஆளாகி, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு ஒரு கட்­டத்தில் மன­நோ­யா­ளி­யா­கவோ, தற்­கொ­லைகள் மூலம் தனது வாழ்வை முடித்­துக்­கொள்ள வேண்­டிய ஒரு கட்­டத்­திற்கு தள்­ளப்­ப­டுவான். எனவே, ஒவ்­வொரு நாளையும், ஒவ்­வொரு தரு­ணத்­தையும் சந்­தோ­ஷ­மாக அனு­ப­வித்து வாழ வேண்டும். மன அழுத்­தத்­திற்­குள்­ளா­னோ­ருக்கு மாத்­திரம் இதனைக் கூற முடி­யாது. பொது­வாக தனி மனிதன் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மன அழுத்தம் என்­பது சாதா­ர­ண­மாக வரக்­கூ­டிய ஒரு விட­ய­மா­கு­மென  தற்­கொ­லைக்கு எதி­ரான அமைப்­பான சுமித்­தி­ரயோவின் தன்­னார்வத் தொண்­டர் திருமதி அனுராதா சந்திரசேகரன் தெரி­வித்தார்.

திருமதி அனுராதா சந்திரசேகரன்  வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

நேர்­கா­ணலின் முழு­மை­யான விபரம் வரு­மாறு,

கேள்வி: இலங்கை சுமித்­தி­ரயோ அமைப் பின், சமூ­கத்­திற்­கான பங்­க­ளிப்­புக்­களை பற்றி விப­ரிக்க முடி­யுமா?

பதில்: நிச்­ச­ய­மாக, ஒவ்­வொரு மனி­தனும் அவன் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை அவனே பெற்­றுக்­கொள்­வ­தோடு, சந்­தோ­ஷ­மான வாழ்க்­கையை வாழ நாங்கள் உதவி புரி­வதே எமது தலை­யாய கடமை என நான் கரு­து­கிறேன். அத்­தோடு தனி­நபர் ஒருவர் எம்­மோடு வந்து பேசும்­பொ­ழுது, முதலில் அவ­ருக்கு நம்­பிக்­கையை உரு­வாக்க வேண்டும். அதா­வது ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் குடும்பம், உற­வி­னர்கள், நண்­பர்கள் இருக்­கின்­றார்கள். இருந்­த­போதும் வெளிப்­ப­டை­யாக அவர்­க­ளிடம் பிரச்­சி­னை­களை கூற மனம் இடம்­கொ­டுப்­ப­தில்லை. காரணம் நம் பிரச்­சி­னை­களை எல்­லோ­ருமே சரி­யான பார்­வையில் பார்ப்­பார்­களா? என்­பதில் சந்­தே­கமே. சில சமயம் அவர்கள் கூறும் ஆலோ­ச­னைகள் அவர்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கலாம். ஆனால் சம்­பந்­தப்­பட்ட நபருக்கு அது எந்­த­ள­வுக்கு பொருத்­த­மாக இருக்கும் என்­ப­தனை கூற முடி­யாது. சில நேரங்களில் சம்­பந்­தப்­பட்ட நப­ருக்கு அது பிரச்­சி­னை­யாகக்கூட அமைந்து விடலாம். சில சம­யங்­களில் மற்­ற­வர்கள் கூறும் ஆலோ­ச­னைகள் அவர்­க­ளுக்கு விரும்­ப­மா­ன­தாக  இல்­லாமல், ஏதோ அவர்­க­ளுக்குள் திணிக்­கப்­ப­டு­வதைப் போன்றும் அமைந்து விடலாம். இதன் கார­ண­மா­கவே எந்த விட­யத்­தையும் சிலர் வெளிப்­ப­டை­யாக பேசு­வ­தில்லை. இத­னா­லேயே எம்­மிடம் மக்கள் வரு­கின்­றனர். நாங்கள் ஒரு­வரின் பிரச்­சி­னைக்­கான தீர்வைப் பெற எவ்­வி­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்­டுமோ, அங்கு ஆரம்­பித்து, அவர்­களின் இடத்திலிருந்து பிரச்­சி­னையை ஆராய்ந்து எவ்­வ­ளவு நேரம் வேண்­டு­மா­னாலும் பேசி, அவர்­க­ளா­கவே ஒரு சிறந்த முடி­வினைப் பெற்றுக்கொள்­ளக்­கூ­டிய வகையில் அவர்­களை தயார் செய்வோம். 

அத்­தோடு, பல­த­ரப்­பட்டவர்­களின் வாழ்­விற்கு ஓர் உறு­து­ணை­யா­கவும், அவர்­களின் பிரச்­சி­னைகள் குறித்த விட­யங்­களை பகிர்ந்துகொள்­ளக்­கூ­டி­யதும், இர­க­சி­யங்கள் பேணப்­ப­டக்­கூ­டிய ஒரு கள­மா­க­வுமே எமது இச்­சேவை அமைந்­தி­ருக்­கி­றது. 

ஒவ்­வொரு வரு­டமும் செப்­டெம்பர் மாதம் 10ஆம் திகதி சர்­வ­தேச தற்­கொ­லைகள் தடுப்பு தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு, கடைப்­பி­டிக்­கப்­பட்டும் வரு­கின்­றது. அந்த வகையில் ஒவ்­வொரு வரு­டமும் ஒரு தொனிப்­பொ­ருளின் கீழ் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் சில நிகழ்­வு­களை ஒழுங்கு செய்வோம். அந்­த­ அடிப்­ப­டையில், இவ்­ வ­ருடம் "தற்­கொ­லை முயற்­சியை தடுப்­பதில் ஒன்­றாக இணைந்து செயற்­ப­டுவோம்" என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் பல நிகழ்­வுகளை ஒழுங்கு செய்­துள் ளோம். 

மேலும், எமது முக்­கி­ய­மான நோக்­கமே, ஒரு தனி­நபர் தன்­னிடம் கூறும் விட­யங்­களின் இர­க­சியத் தன்­மையை பேணு­வ­துடன், இன, மத, மொழி மற்றும் உயர், தாழ் நிலை வேறு­பா­டு­க­ளின்றி எம்மால் முடிந்த சேவை­களை அவர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கவும் நேர­வ­ரை­யறை இல்­லா­மலும் வழங்­கு­வ­தாகும். முன்­ப­திவு எதுவும் கூட அவ­சியம் இல்லை.

அத்­தோடு எமது சுமித்­தி­ரயோ அமைப்பு வரு­டத்தின் 365 நாட்­களும் விடு­முறை நாட்கள் உட்­பட திறந்­தி­ருக்கும். இங்கு தொண்­டாற்றும் தன்­னார்வத் தெண்­டர்­க­ளா­கிய நாம் எது­வித வேத­னத்­திற்­கா­கவும் பணி­யாற்­ற­வில்லை. இதனை நாங் கள் ஒரு தொண்­டாக கரு­தியே சேவை யாற்றுகின்றோம். 

இதே­வேளை இங்கு தொண்­டாற்றும் தன்­னார்வத் தெண்­டர்­களை வெறு­மனே இவ்­வ­மைப்பில் தெரிவு செய்­ய­மாட்­டார்கள். அதற்­கெ­ன­வுள்ள அமைப்பின் குழு­வி­னரால் தெரி­வு­செய்­யப்­பட்டு, ஆறு வாரங்கள் தொடர்ச்­சி­யாக சிறப்புப் பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு அவற்­றி­லி­ருந்து தெரி­வு­செய்­யப்­பட்ட தன்­னார்வத் தொண்­டர்கள் மாத்­தி­ரமே இங்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கி­றார்கள்.

கேள்வி: இலங்­கையில் தற்­கொலை அதி­க­ரித்­துள்­ள­மைக்­கான கார­ணங்கள் என்­ன­வென்று கூற முடி­யுமா?

பதில்: தற்­கொ­லைகள் என்று மட்டும் கூற­மு­டி­யாது. ஒருவர் தற்­கொலைவரை செல்­வ­தற்­கான முக்­கிய கார­ணமே உறவு முறைதான் என்று நான் கூறுவேன். அதா­வது உறவு முறை­களில் காணப்­படும் விரி­சல்கள் மற்றும் முரண்­பா­டு­களை இதற்­கான கார­ணங்­க­ளாக கருத முடியும். உதா­ர­ண­மாக நம்­பிக்கை துரோ­கங்கள், காதல் தோல்வி, ஒருவர் மீதான அளவு கடந்த நம்­பிக்கை, நண்­பர்கள் புரிதல் இன்மை, குடும்­பத்தில் பெற்­றோ­ருக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள், கடன் தொல்லை, திரு­மணப் பிரச்­சி­னைகள், பிள்­ளை­களை தாக்­கக்­கூ­டி­ய­தான பெற்­றோரின் வார்த்தைப் பிர­யோ­கங்கள், போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­குதல், பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளா­குதல், சமூ­க­வ­லைத்­த­ளங்­களின் மீதான அதீத ஈடு­பாடு எனக் கூறிக்கொண்டே செல்­லலாம்.

கேள்வி: சமூ­கத்தில் எப்­ப­டி­யொ­ருவர் மன அழுத்­தத்­திற்கு ஆளா­கி­யுள்ளார் என்­பதை அறிந்து கொள்­வது?

பதில்: நிச்­ச­ய­மாக முக்­கி­ய­மா­ன­தொரு வினா. சமூ­கத்தில் அனை­வ­ரி­னதும் இயந்­திர வாழ்க்­கை­யாகிப் போன இன்­றைய கால கட்­டத்தில் குடும்­பத்­திலும், ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தித்துக்கொள்­ளவோ அவர்­க­ளுக்­காக நேரம் செல­வ­ழித்துப் பார்த்துக் கொள்­ளவோ, பிரச்­சி­னை­களை கேட்டு ஆராய்ந்து கொள்­ளவோ நேரம் கிடை­யாது. இவ்­வாறு மன அழுத்­தத்­திற்­குள்­ளா­ன­வர்­களை பின்­வரும் கார­ணி­களைக் கொண்டு அடை­யாளம் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

அதா­வது அவர்­களை அவர்­களே தனிமைப்படுத்திக் கொள்­வார்கள். யாரு­டனும் பேசு­வதைக் குறைத்துக் கொள்­வார்கள். நிகழ்­வு­களில் பங்­கேற்­பதை தவிர்த்தல், அன்­றாட செயற்­பா­டு­களில் ஈடு­பட விருப்­ப­மின்மை  (உணவு உட்­கொள்ளல், தூங்­குதல், வேலை­செய்தல்) இது­போன்றவர்­களை நாம் கண்­ட­றிந்து இவர்கள் ஏதோ ஒரு வகை­யான மன அழுத்­தத்தில் உள்­ளார்கள் என்­பதை அறிந்து கொள்­ளலாம். ஏனெனில் சாதா­ ரண மனி­த­னி­டத்தில் இவ்­வா­றான நிலை இருக்­காது.

கேள்வி: அவர்­க­ளுக்கு நீங்கள் வழங்கும் ஆலோ­ச­னைகள் என்­னென்ன?

பதில்: அவர்­க­ளுக்கு நான் கூறும் முக்­கிய ஆலோ­சனை என்­ன­வெனில், ஒவ்­வொரு நாளையும், ஒவ்­வொரு தரு­ணத்­தையும் சந்­தோஷ­மாக அனு­ப­வித்து வாழ வேண்டும். மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­னோ­ருக்கு மாத்­திரம் கூற முடி­யாது. பொது­வாக தனி மனிதன் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மன அழுத்தம் என்­பது சாதா­ர­ண­மாக வரக்­கூ­டிய ஒரு விட­ய­மாகும்.

எனினும் ஒவ்­வொரு மனி­த­னுக்­குள்­ளேயும் மன அழுத்தம் வித்­தி­யா­சப்­படும். சிலர் அதைக் கடந்து விடு­வார்கள். பலர் அதை பெரிய விட­ய­மாக கருதி தனக்­குத்­தானே கொஞ்சம் கொஞ்­ச­மாக மன அழுத்­தத்­திற்குள் சென்று விடு­வார்கள். உதா­ர­ண­மாக ஒரு பலூனை எடுத்துக்கொண்டால், உள்ளே காற்றை உள்­வாங்கிக்கொண்டே வெளியே பள­ப­ளப்­பா­கவும் அழ­கா­கவும் தெரியும். அதா­வது பிரச்­சி­னையை தனக்குள் வைத்து வெளியில் சிரித்து வாழும் மனி­தனை போன்­ற­தாகும். இந்­நி­லையில் காற்று நிறைந்து பலூன் வெடிப்­பதைப் போல, மனி­தனும் மன ரீதி­யாக அழுத்­த­த்திற்கு ஆளாகி, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு ஒரு கட்­டத்தில் மன­நோ­யா­ளி­யா­கவோ, தற்­கொ­லைகள் மூலம் தமது வாழ்வை முடித்துக்கொள்ள வேண்­டிய ஒரு கட்­டத்­திற்கோ தள்­ளப்­ப­டுவான். அவ்­வா­றில்­லாமல், காற்று நிறைந்த அந்த பலூனிலுள்ள காற்றை வெளியில் எடுப்­பதைப் போன்று, தன்­னார்வத் தொண்­டர்­க­ளா­கிய நாம் அவர்­க­ளுடன் உரை­யாடி குறித்த நபரின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை இல­கு­வாக பெற்றுக்கொடுக்க முயற்­சிப்­பதே எமது கடமை. 

இந்­நி­லையில் அவர்கள் வைத்­தி­யரை நாடவோ, அல்­லது மருந்­து­களை தொடர்ச்­சி­யாக பெற்றுக்கொள்­வதை தடுப்­ப­தற்கோ நாங்கள் உறு­து­ணை­யாக நிற்போம். மாறாக எம்மைப் போன்ற தன்­னார்வத் தொண்­டர்­களைக்கூட சந்­திக்­கா­மலும், பிரச்­சி­னை­களை வெளியில் சொல்­லா­மலும், தாமா­கவே தீர்வு காண எத்­த­னிக்கும் தரு­ணத்தில் ஒரு கட்­டத்தில் அந்த முயற்சி தோல்­வி­யுற்று, இறு­தியில் மன­நோ­யா­ளி­க­ளாக செல்­வதைக்கூட நாம் அதி­க­மாக பார்த்­தி­ருக்­கிறோம். 

கேள்வி: தனி­நபர் ஒரு­வரின் தற்­கொலை முயற்­சியில் சமூ­கத்தின் பங்கு உள்­ள­தென நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பதில் : நிச்­ச­ய­மாக. ஏற்­க­னவே நான் கூறி­யதைப் போன்று ஒரு மனி­த­னுக்கு உணவு, உடை மற்றும் உறையுள் எவ்­வ­ளவு முக்­கி­யமோ அந்­த­ள­வுக்கு உணர்­வு­களும் முக்­கியம். அவ்­வா­றான உணர்­வு­களை முதலில் குழந்­தை­களிலிருந்து கொடுத்தும், பெற்றும் பழக வேண்டும்.

ஒரு சமூ­கத்தின்  முதல் அங்கம் குடும்­பமே. எனவே அக்குடும்­பத்­தி­லி­ருந்தே மனித உணர்­வு­களின் முக்­கி­யத்­துவம் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அத்­தோடு ஒவ்­வொரு மனி­த­னுக்கும் சுய­ம­ரி­யாதை, சுயகெள­ரவம் என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தொன்­றாகும். சில சம­யங்­களில் அவற்றைப் பெற்றுக்கொள்­வதில்கூட சில இன்­னல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம். உதா­ர­ண­மாக தனக்கு பிடித்த உணவு, உடை, கல்வி  மற்றும் தொழில் போன்­ற­வற்றை பெற்றுக்கொள்­வதில் தடைகள் இருப்பின் விருப்பம் அற்­றதும், கட்­டா­யத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­து­மாக அவற்றை பெற்றுக் கொள்­ளும்­போது மன ரீதி­யான பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாக நேரிடும்.  இது­போன்ற பல கார­ணங்­க­ளுக்கு சமூ­கத்தின் பங்கு இருக்­கலாம் என நான் கரு­து­கின்றேன்.

கேள்வி: இதனை கையாள்­வ­தற்­கான வழி­வ­கைகள் என்ன?, இதற்­கான ஊட­கங்­களின் கடப்­பா­டுகள் எவை?

பதில்: மிக முக்­கி­ய­மா­ன­தொரு வினா. ஒருவர் கடு­மை­யா­ன­தொரு மன அழுத்­தத்­திற்கு ஆளா­கி­யுள்ளார் என்­பதை தெரிந்து கொண்­டோலே பெற்­றோர்­க­ளா­கவோ, ஆசி­ரி­யர்­க­ளா­கவோ அல்­லது எங்­களை போன்ற தன்­னார்வத் தொண்­டர்­க­ளா­கவோ அவர்­க­ளுக்­கான தெளி­வூட்­டல்­களை செய்து, அவர்­களை பிரச்­சி­னை­யி­லி­ருந்து மீட்க வேண்டும். ஆனால் பெரும்­பாலும் இது சமூ­கத்தில் நடப்­ப­தில்லை. நாங்கள் அவ்­வா­றான பல விட­யங்­களை பார்த்த அனு­ப­வமும் உண்டு. தொலை­பேசி வாயி­லா­கக்­கூட எத்­த­னையோ அழைப்­புக்­களை நாங்கள் ஏற்று அவர்­க­ளுக்­கான தீர்­வு­களை வழங்கி பாது­காத்­தி­ருக்­கின்றோம்.

அதா­வது குறித்த நபர்­களை நாங்கள் நாடி, உங்­க­ளிற்கு  நாங்கள் இருக்­கிறோம். உங்கள் பிரச்­சி­னைகள் என்­ன­வாக இருந்­தாலும் நாங்கள் பார்த்துக் கொள்­கின்றோம் என்ற ஆறு­த­லான வார்த்­தை­களை கூறி, இரவு பகல் பாராது அவர்­க­ளுடன் நேரம் செல­வ­ழித்து நான் முன்பு கூறி­யதைப் போல அவர்­களின் பிரச்­சி­னைக்கு உள்ளே சென்று, அவர்­களின் இடத்திலிருந்து பார்த்துப் பேசி ஆலோ­ச­னைகள் அல்­லாது, அவர்­க­ளா­கவே ஒரு நல்ல தீர்­வினைப் பெற்றுக்கொள்­ளும்­ப­டி­யாக அவர்­களை வளப்­ப­டுத்­துவோம்.

தமது பிரச்­சி­னை­க­ளையும் தாண்டி வேறு ஓர் உலகம் இருக்­கின்­றது என்­பதை அவர்­க­ளுக்கு புரி­ய­வைத்து 'இர­வொன்று வந்தால்.. விடி­ய­லொன்று உள்­ளது' என்­ப­தையும் உணர வைப்­பதே எமது நோக்­க­மாகும். அத்­தோடு, போதைப்­பொருள் பாவ­னைகள், தொலை­பேசி பாவ­னைக்கு அதி­க­மாக அடி­மை­யா­ன­வர்கள், இன்னும் அதி­கப்­ப­டி­யான விட­யங்­க­ளுக்கு அடி­மை­யாகி, அதி­லி­ருந்து வெளி­வ­ர­மு­டி­யாமல், மன­உ­ளைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்ள நபர்­க­ளுக்­காக, விசே­ட­மான வைத்­திய பரி­சோ­த­னை­க­ளு­ட­னான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தையும் ஒரு சிறந்த  சேவை­யாக நாங்கள் "மெல்­மெ­துர" எனும் இல்­லத்தில் செய்து வரு­கின்­ற­மையும் குறிப்­பி­ட­த்தக்­கது. 

அத்­தோடு, பல­த­ரப்­பட்­டோரின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய பாட­சா­லை­க­ளுக்கு சென்று ஆசி­ரி­யர்­க­ளுக்கும், வைத்­தி­ய­சா­லை­களில் தாதி­யர்­க­ளுக்­கு­மாக பயிற்சி பட்­ட­றை­க­ளையும் நடத்தி வரு­கின்றோம்.

மற்­றுமோர் சிறந்த ஆலோ­ச­னை­யாக நான் கரு­து­வது என்­ன­வென்றால், சில நேரங்­களில் நமது வாழ்வில்கூட நாம் பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்­கலாம். ஆனால் அவற்­றை­யெல்லாம் தாண்டி இன்றும் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம் என்­ப­தையும் உணரச் செய்து ஆத­ர­வான கருத்­துக்­களை கூறச் செய்­வதும் ஒரு சிறந்த அணுகு முறை­யாகும். 

முன்­புபோல் அல்­லாது இப்­போது எல் லாம் சிறிய பிள்­ளை­களைக்கூட பெற்றோர் எமது சுமித்திரயோ அமைப்பிற்கு அழை த்து வந்து கலந்துரையாடச் செய்வது வழக் கமாகி விட்டது. இது எமக்கு மகிழ்ச் சியும் அளிக்கின்றது.

ஊடகத்துறையின் பங்கினை பொறுத்த வரையில் சமூகத்தில் ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ சரியானதாகவும், தெளிவானதாகவும் நம்பகத்தன்மையுட னும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பெரிய பொறுப்பை ஊடகங்கள் பெற்றுள் ளன. 

அப்படிப் பார்க்கையில், தற்கொலை களையோ அதற்கான காரணங்களையோ அளவுக்கு அதிகமாக விபரிக்கக்கூடாது என நான் கருதுகிறேன். உதாரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், அது தொடர் பான விளக்கத்தினை இயற்கை காட்சியொன்றை வர்ணிப்பதைப் போன்று வர்ணிக்கத் தேவையில்லை.  மேலும், அத்தோடு அது தொடர்பான படங்களையும் அப்படியே பிரசுரிக்கவோ, காண்பிக்கவோ தேவையில்லை. காரணம் ஊடகம் என்பது, வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டதொன்று, குறித்த நிகழ்வு களை உதாரணமாக கொண்டு வேறொரு அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு, தெரிந்தோ தெரியாமலோ ஊடகங்கள் ஒரு போதும் ஊன்றுகோலாகி விடக்கூடாது என நான் கருதுகிறேன்.  

எனவே பிரச்சினைகளுக்கான தீர்வு மரணம் மட்டுமே என்றால், இன்று உலகம் ஒரு மயானமாகவே காட்சியளித்திருக்கும். ஆகையினால், உங்களுக்கொரு பிரச்சி னையென்றால்,  எங்களோடு எப்போது வேண்டுமானாலும் இணைந்திருக்கலாம். இதுவே எமது மகத்தான தொண்டு என்று கருதுகிறேன்.

தொடர்புகளுக்கு: தொலைபேசி: 011 2683555, 011 2696 666, 011 2692909, sumithra@sumithrayo.org, இல.60B, ஹோர்ட்டன் பிளேஸ், கொழும்பு 07.


நேர்காணல்: சற்குணநாதன் லோகதர்ஷினி