இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுடன் அமெரிக்கா முக்கிய விவாதம்!!

செவ்வாய் மே 12, 2020

கொரோனா விவகாரத்தில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுடன் அமெரிக்கா முக்கிய விவாதம் ஒன்றை மேற்கொண்டது.

கொரோனா தொடர்பான பல உண்மைகளை சீனா மறைத்ததாகவும் அது உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்ததாகவும், அமெரிக்கா சீனாவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதே நேரம் சீனாவின் சர்வதேச வர்த்தக உறவுகளையும் மறுபரிசீலனை செய்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ , இந்தியா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், தென்கொரியா .உள்ளிட்ட 7 நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் விவாதம் நடத்தினார்.

75 நிமிடங்கள் நீடித்த விவாதத்தின் போது சீனாவுக்கு மாற்றாக இதர நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை எப்படி கையாளுவது போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

முக்கியமாக இனிவரும் காலங்களில் வர்த்தகதேவைகளுக்கு சீனாவை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்றும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.