இந்தியாவில் ஒரே நாளில் 88 பேருக்கு பாதிப்பு- உயிரிழப்பு 20

வெள்ளி மார்ச் 27, 2020

இந்தியாவிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் நேற்று உயிரிழந்தததால் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் உயிரிழப்பும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்ததால் மொத்தம் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 மரணங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.

மாநிலங்களில்..

கேரளாவில் அதிகபட்சமாக 138 பேரும் மகாராஷ்டிராவில் 130 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 55, தெலுங்கானா 43; ராஜஸ்தான் 43; உத்தரப்பிரதேசத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


டெல்லி- 36; பஞ்சாப்; 29; தமிழகம்- 29; ஹரியானா 21 பேருக்கும் குஜராத்தில் 43 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 23; மேற்கு வங்கத்தில் 11; ஆந்திராவில் 10 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் 5 பேரும் கர்நாடகாவில் 2 பேரும் தமிழகத்தில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். குஜராத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.