இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!

வெள்ளி மே 22, 2020

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தோடம்பழம்,எலுமிச்சை,திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.அத்துடன் யோகட், செத்தல் மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றுக்கான வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.