இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நடவடிக்கை தொடரும்!

ஞாயிறு ஓகஸ்ட் 25, 2019

அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கி­னாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளுக்கும், கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கும், தற்­போது பயங்­க­ர­வாத பிரி­வி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களின் விளக்­க­ம­றி­ய­லுக்கும் மற்றும் அவர்­களின் சொத்­து­களை தடை­செய்­வ­தற்கும்  எந்­த­வி­த­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் காவல் துறை  அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஊட­க­மொன்றில் வெளி­யா­கி­யி­ருந்த செய்தி தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸ் தலை­மை­யகம்,  இந்த செய்தி தொடர்பில் பொது­மக்­க­ளுக்கு தெளி­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு அறி­வித்­தலை மேற்­கொள்­வ­தா­கவும்  காவல் துறை  அத்­தி­யட்­சகர் மேலும் தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில், பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் மூன்று அமைப்­புகள் நாட்டில் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன. அதன்­படி தேசிய தௌஹீத் ஜமாஅத் , ஜமா­அத்தே மில்­லாது இப்­ராஹிம் மற்றும் விலயா அஸ் செய்­லானி எனப்­படும் மூன்று அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் இவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அவ­சர காலச் சட்­டத்தை நீக்­கு­வ­தனால் இவற்­றுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடையும் நீக்­கப்­படும் என்­பது தவ­றா­ன­தாகும்.

இந்த அமைப்­புகள் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி தடை­செய்­யப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டன. அதற்­க­மைய 22233 இலக்க விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த தடை­தொ­டர்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது 1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க சட்ட கோவைக்­க­மை­யவே இந்த அமைப்­புகள் தடை­செய்­யப்­ப­டு­வ­தாக வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  

இந்­நி­லையில் அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கு­வ­தா­னாலும் இந்த அமைப்­பு­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை ஒரு­போதும் நீக்­கப்­ப­டாது.

அதே­வேளை பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 200 பேரும் , அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கு­வ­தனால் விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டி­ருப்­பதும் சாத்­தி­ய­மற்­றது. இவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் விசா­ர­ணைகள் முடிவுரும் வரை எந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். மற்றும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர். இந்த விசாரணை செயற்பாடுகளுக்கு அவசரகால சட்டம் நீக்கம் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.