ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும்!

ஞாயிறு செப்டம்பர் 15, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றிப் பெறும் கொள்கைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே  ஜனாதிபதி வேட்பாளரை   கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் என சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்யின் வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றிப் பெற முடியாது. அதனால் பரந்த ஒரு பலமிக்க அணியாக  தோற்றம் பெற வேண்டும். அதற்காகவே சிறந்த வேலைத்திட்டங்கள் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆராயப்பட்டதன் பின்னரே கட்சியின் செயற்குழுவினால் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.