காலநிலை மாற்றங்களை கணிப்பீடு செய்வதில் 5G தொழில்நுட்பம்

வியாழன் மே 23, 2019

உலகளவில் உள்ள இணையப்பாவனையாளர்கள் மற்றும் கைப்பேசி பாவனையளார்கள் ஐந்தாம் தலைமுறை வலையமைப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இத் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கையில் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதாவது காலநிலை மாற்றங்களை கணிப்பீடு செய்வதில் 5G தொழில்நுட்பம் குறுக்கீடுகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளனர். இதனால் காலநிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க முடியாது போகும். இது தொடர்பாக நாசா மற்றும் National Oceanic and Atmospheric Administration (NOAA) என்பன இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால் சூறாவளிகளை கணிப்பதிலும் 30 சதவீதம் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.