காபி குடிப்பதால் இதய ஆரோக்கியம் பாதிக்கபடுமா?

வியாழன் அக்டோபர் 17, 2019

நாம் அன்றாட வாழ்க்கையில் தேநீர் மற்றும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இந்த காபி குடிப்பதால் பல தீமைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் காபி குடிப்பதால் இதை ஆரோக்கியம் பாதிக்கபடுமா என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

காபி மற்றும் டீ யில் கஃபைன் அதிகம் இருப்பதால் அது னது மூளையின் செயல் பாட்டை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.இந்நிலையில் இதனால் சில வெளி பார்க்கும் நேரங்களில் மன அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்பட்டாலோ காபி மற்றும் தேநீர் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.

காபி குடித்தால் இதய நோய் ஏற்படும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் இதயத்திற்கும் ,தமணிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

மேலும் ஒரு நாளைக்கு 20 கப்பிற்கும் மேல் காப்பி குடிப்பவர்களையும் மற்றும் 1 கப் காப்பி குடிப்பவரையும் வைத்து நடத்த பட்ட ஆய்வில் காபி குடிப்பதால் தமனியில் எந்த விதமான இறுக்கமும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வயது உதிர்வு ,அதிகப்படியான எடை, மது பழக்கம் போன்றவைகளால் தான் தமனியில் இறுக்கம் ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.