“காத்” போதைப் பொருள் சிக்கியது!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

ஆயுர்வேத பானம் (கீறின் டீ) என்ற பெயரில் எத்தியோப்பியா நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு தபாலில் அனுப்பப்பட்ட “காத்” எனப்படும் போதைப்பொருள் காவல் துறை  போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

20 கிலோகிராம்  போதைப்பொருள் அடங்கிய தபால் பொதி 2018, 2019ஆம் ஆண்டுகளில் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றைப் பொறுப்பேற்க எவரும் வருகைத் தராதததால், அதனைத் திறந்த பார்த்த போது, போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் காத் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதியில் உள்ள  முகவரியைப் பயன்படுத்தி சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை  போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.