கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 34 பேர் பரிதாப பலி!

ஞாயிறு நவம்பர் 24, 2019

கென்யா நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகினர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் டக்மால் என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 17 போ் புதையுண்டனா். மேலும், பல்வேறு கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 17 போ் உயிரிழந்தனா். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.