களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

புதன் ஓகஸ்ட் 14, 2019

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதனால் அதனை அண்டிய பகுதியில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக புளத்சிங்கள, பலிந்தன்நுவர, கிரியெல்ல, இங்கிரிய, மாதுருவெல போன்ற தாழிடங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது