கொரோனா நீக்கம் செய்யப்பட்ட நபர்களை அழைத்துச் சென்ற பேரூந்து விபத்து

புதன் மார்ச் 25, 2020

கொரோனா வைரஸ் காரணமாக தொற்று நீக்கம் செய்யப்பட்ட நபர்களை அழைத்துச் சென்ற பேரூந்து மீது சுற்றுலா பயணிகள் சென்ற பேரூந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படையினர் இருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களை படையினர், மாத்தறைக்கு ஏற்றிச் சென்ற பேரூந்து மீது பின்னால் வந்த மற்றுமொரு பேரூந்து மோதியுள்ளது.

இதன் போது படையினர் இருவரும், சுற்றுலா பேரூந்து சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.