கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் தற்போதைய சட்டத்திட்டங்களை கடுமையாக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினுடான நேற்றைய சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவசபையின் சார்பில் கலந்துக்கொண்டிருந்த பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அபாயம் உள்ளது.

ஆகவே தற்போதை நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார ரீதியில் முன்னெடுக்கப்படும் சட்டத்திட்டங்களை கடுமையான முறையில் அமுல்ப்படுத்துமாறு அவர் இதன்போது கோரியுள்ளார்.