கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடானது ஸ்பெய்ன்

புதன் மார்ச் 25, 2020

ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக உயர்வடைந்துள்ளது.

இது சீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதனையடுத்து, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் பதிவாகியுள்ளது.