கொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு

திங்கள் மார்ச் 30, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிரியாவில் இதுவரை 9 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.