கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி!

திங்கள் மார்ச் 30, 2020

பிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகனின் தந்தையார் செல்வரட்ணம் குணரட்ணம் அவர்களும் சுவிஸ் நாட்டில் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

4

கீர்த்திகன் இறப்பதற்கு ஒரு வாரங்களுக்கு முன்னரே சுவிஸ் நாட்டிலுள்ள சகோதரி வீட்டுக்குச் சென்று தந்தையைப் பார்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுவிஸில் உள்ள சகோதரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரியவருகிறது.

தொடர் இழப்புக்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் மிகுந்த சொல்லொணாத் துயரத்தில் உறைந்து போயுள்ளனர்.