கோத்தாவிற்கு வாக்களிக்காவிட்டால் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்

வெள்ளி நவம்பர் 08, 2019

வடக்கு, கிழக்குக்கு மஹிந்த ராஜபக்ச பட்டாளம், கோத்தாபய ராஜபக்ச பட்டாளம், நாமல் ராஜபக்சய பட்டாளங்கள் வந்து தந்திரமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எமக்கு வாக்களிக்காவிட்டால் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள், இல்லையேல் சஜித் அல்லாத பிறிதொருவருக்கு வாக்களியுங்கள் எனக் கெஞ்சுகின்றனர். இதுதான் அவர்களது குள்ளநரி தந்திரம் எனவும் அவர் கூறினார். 

இன்று (08) மதியம் கிளிநொச்சியில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

17 ஆம் திகதி சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது நிச்சயமானது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.