கொடூர ஜூலை!

ஞாயிறு ஜூலை 21, 2019

வந்தோர்களை 
வாழவைத்த ஈழத்தில் 
வந்தேறி சிங்களன் 
எம்மீது நடத்திய 
கொடூரம் ஜூலை 
கலவரம் தமிழர் 
உயிர்களை அழித்து
வீடிழந்து எமது
சொத்துக்களை 
சூறையாடி 
சொந்த நாட்டிலே 
அகதியாக்கி 
எம்மை அடிமையாக்கி 
எக்காளம்போட்டது 
பௌத்த பேரினவாதம் 
ஆனாலும் 
அதிலும் ஓர் நன்மை 
கரிகாலனை எமக்கும் 
உலகிற்கும் 
அடையாளம் 
காட்டியதற்கு 
வென்சினம் கொண்டு 
வேங்கை 
சீறிப்பாய்ந்ததை நீ 
கண்டீர் 
வரி எழுதும் போது
வரிப்புலிகள் மட்டும் 
நினைவுக்கு 
வரவில்லை 
எங்கள்அண்ணனை 
தம்பி என்று 
அழைத்த 
தங்கதுரையும் 
குட்டிமணியும் 
சிங்களன்புடிங்கிய 
அவனது விழியும் 
எம்கண்முன்னே
வரும்
கருப்பு ஜூலை
தினத்தில்

றொப்