கரும்புலி மேஜர் சோபிதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வியாழன் அக்டோபர் 24, 2019

கரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையில் 24.10.2000 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!