கதிர்காமம் பகுதியில் விடுதியில் மறைந்திருந்த ரஷ்ய யுவதி

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

கதிர்காமம் பகுதியில் விடுதியில் மறைந்திருந்த ரஷ்ய யுவதியொருவர் கண்டறியப்பட்ட நிலையில் குறித்த பெண் , தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோதமிக பகுதியிலுள்ள விடுதியில் குறித்த பெண் கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபப்ட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அவர் சிறீலங்காவுக்கு வந்திருந்த அப்பெண் விடுதியில் தங்கியிருந்து அந்தப்பகுதியில் சாதாரணமாக நடமாடி வந்துள்ளார்.

இதனை அவதானித்த பிரதேச பொதுமக்கள் வழங்கிய தகவலின்படி அவர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த விடுதிக்கு வந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது