கடற்கரும்புலி மேஜர் நிலவன்,கடற்கரும்புலி கப்டன் மதன் வீரவணக்க நாள்!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019

26.08.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல் நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரண்டு நீரூந்து விசைப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டது.

கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நிலவன், கடற்கரும்புலி கப்டன் மதன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இத் தாக்குதல் நடவடிக்கையின்  போது ………!

கடற்புலி கப்டன் சிவா (முத்துலிங்கம் கருணாநாதன்–குச்சவெளி, திருகோணமலை)
கடற்புலி லெப்டினன்ட் பூபாலன் (சுந்தரராஜ் பாஸ்கரன்– நாகர்கோவில், யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் அவர்களின் நினைவு சுமந்து கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!