குழந்தைகளுடன் விளையாடுங்கள்!

சனி ஜூன் 08, 2019

குழந்தைகள் இடையேயான விளையாட்டுக்கள், மூன்று முதல் எட்டு வயது வரையில் குழந்தைகளின் புத்தாக்க சிந்தனை மற்றும் கல்வி திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, தொடர்பியல் மற்றும் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணும் திறன்களையும் வளர்ப்பதாக செசேம் வொர்க்‌ஷாப் இந்தியா டிரஸ்ட் மற்றும் லிகோ பவுண்டேஷன் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளது திறன்கள் மட்டுமின்றி, சமூக வளர்ச்சி, புத்தாக்க சிந்தினை குறித்த பெற்றோர்களது பார்வையும், குழந்தைகளை அவர்கள் அணுகும் விதமும் மேம்படுகிறது. இத்தகைய மாற்றங்கள், குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்பட பெருமளவு உதவுவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.