லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து !

ஞாயிறு நவம்பர் 03, 2019

காலி, இமதுவ பகுதியில் நேற்றிரவு லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.