லண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி!

திங்கள் மார்ச் 30, 2020

லண்டனில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மெய்யழகன் என்ற இளைஞர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் மகிழுந்துச் சாரதியாக தொழில்பார்க்கிறார். கடந்த 10 நாட்களாக, கடும் காய்ச்சல் இவருக்கு இருந்துள்ளது. இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் இவரை வைத்தியசாலையில் சேர்க்க, வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. பின்னர் நிலைமை மோசமடைந்த பின்னரே அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால், அது மிகவும் காலம் தாழ்த்திய செயல் எனபதால் இளைஞன் உயிரிழந்தார்.

இவரது மகிழுந்தில் பயணித்த பயணி ஒருவர் கொரோனாவை மெய்யழகனுக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இன்று அவர் உயிரிழந்துள்ளார்.