மாலைத் தீவு பிரஜைகளை தேடி சி.ஐ.டி.விஷேட விசாரணை!

வெள்ளி பெப்ரவரி 21, 2020

21/4 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தேடி சி.ஐ.டி.விஷேட விசாரணை

21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை பின்னணியிலிருந்து வழி நடத்தியதாக நம்பப்படும் நான்கு மாலை தீவு பிரஜைகளைக் கைது செய்ய சி.ஐ.டி.யின் தனிப்படையொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இவர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள சி.ஐ.டி., சர்வதேச காவல் துறையுடன்  இணைந்து அவர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனைய இருவர் குறித்த தகவல்களையும் சர்வதேச காவல் துறையின் தகவல் கட்டமைப்பு ஊடாக  பகிர்ந்து தேடி வருகின்றனர்.

 ;இந்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த வருடம் ; இடம்பெற்ற  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நடகளில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரானின் பயங்கரவாத கும்பலுடன் மிக நெருங்கிய  தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.