மாபெரும் பேரணி நிறுத்தப்பட்டுள்ளது!

சனி பெப்ரவரி 29, 2020

வணக்கம்,
அனைவரினதும் மிக முக்கிய கவனத்திற்கு..

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக; சுவிஸ் கூட்டாட்சி அரசினால் விடுக்கப்பட்டுள்ள பொதுவான அறிவித்தலோடு, ஜெனீவா மாநில அரச அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு  அமைவாகவும் 09.03.2020, திங்கட்கிழமை ஐ.நா முன்றலில்  நடைபெற  ஏற்பாடாகி இருந்த மாபெரும் பேரணியானது நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை தங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இத்தகவலை புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்ளுமாறும், தங்களது தொடர்ச்சியான  ஆதரவிற்கு நன்றியினையும் இத்தருணத்தில்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா