மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு : 340 பேர் கைது!

திங்கள் டிசம்பர் 16, 2019

காவல் துறை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 340 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பிரதி காவல் துறை மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை 8 மணி முதல் 7 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 340 பேரை காவல் துறை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.