மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்: -யாழ்.போதனா வைத்திய சாலையில் திறப்பு-

புதன் ஜூலை 24, 2019

யாழ்.போதனா வைத்திய சாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொலை நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் நாளை வியாழக்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. 


இவ் புதிய கட்டடத் தொகுதியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கப்படவுள்ளதாக அழைப்பிதள் தயாரிக்ககப்பட்டிருந்த போதும் சில காரணங்களால் ஜனாதிபதியின் வருகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது. 


இந்நிலையில் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் அதிமேதகு கலாவ் (ப்)பூ தாஃயர்,  சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி ,யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோர் குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.