மீன்பிடிப் படகை வழி மறித்து சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்!

புதன் ஓகஸ்ட் 14, 2019

வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை வழி மறித்து சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படகை வழிமறித்து, மீனைப் பெற்றுக் கொண்ட சிறீலங்கா கடற்படையினர் படகு மீது, தமது படகினால் மோதியுள்ளனர்.

இதனால் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்தது. சக மீனவர்களி்ன் உதவியுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .