மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!

வியாழன் ஏப்ரல் 09, 2020

வவுனியா மகா இளுப்பைபெரியகுளம் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பல நாட்களாக வவுனியாவில் வறட்சி நிலவிய நிலையில் நேற்று அங்கு மழைப்பெய்துள்ளது.

இவ்வாறு மழைப்பெய்த போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மழைப் பெய்த வேளையில் உயிரிழந்தவர் வெட்ட வெளியில் நடந்து சென்ற போதே இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.