மக்களின் பொறுப்பின்மை !

புதன் ஏப்ரல் 08, 2020

 பிரான்சில் கடந்த வார இறுதியில் நல்ல காலநிலை இருந்தமையால், மக்களில் பலர் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு, வெளியே பெருமளவில் உலாவி, பூங்களில் ஓய்வெடுத்து, மேலும் சிலர் கடற்கறை வரைகூடச் சென்றுள்ளனர். இந்தப் பொறுப்பற்றதனம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என வைத்தியத்துறையினர் அஞ்சுகின்றனர்.

 

இதன் பாதிப்பு நாளை வியாழக்கிழமையில் இருந்து பெருமளவானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டும் ஆபத்து உள்ளது என்றும், நாளை ஒரு «கறுப்பு வியாழன்» ஆகலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

இத்தாலி, ஸ்பெயினிற்கு அடுத்தபடியாகப் பிரான்ஸ் 10.000 சாவுகளைத் தாண்டி பேரழிவைச் சந்தித்து வருகின்றது. 30.000 இற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்க கிட்டத்தட்ட 8.000 பேர் அவசரசிகிச்சைப்பிரிவில் உயிராபத்தில் உள்ளனர். இதுவே வைத்தியத்துறையினர்க்குத் தாங்க முடியாத சுமையாக உள்ளது.

 

 

மக்களின் பொறுப்பில்லாத்தனத்தைக் கண்டித்துள்ள மருத்துவத்துறையினர், பெரும் கவலையைத் தெரிவித்து, அனைவரையும் பொறுப்படன் உள்ளிருப்பைப் பேணுமாறு கோரி உள்ளனர்.