மனிதப் பலவீனங்களுக்கு எல்லாம் ஆசைதான் காரணம் இது கொறோணாவுக்கும் பொருந்தும்!

திங்கள் ஏப்ரல் 20, 2020

உலகில் நடந்த நடக்கும் விடையங்கள் ஆச்சரியமும் அதிசயமும் கொண்டவையாக நாளும் பொழுதும் களிகின்றன. இயற்கையின் விதியை மீறி மனிதனின் ஆசை, அதுவும் பேராசை இந்த பூவுலகை மாற்றியுள்ளது.

இயற்கையின் படைப்பில் இந்தப்பூமி எல்ல உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை மனிதன் மட்டும் மறந்ததன் விளைவே இந்த பேரிடர். மிருகங்கள் வாழ்வதற்க்கு என்று இயற்கை அன்னை அமைத்துக் கொடுத்த இடங்களை மனிதன் தன் சுய நலத்தேவைக்கு பயன்படுத்த தொடங்கியதில் இருந்து ஆரம்பமானது அழிவுக்கான ஆரம்பம். புதிய ஆராச்சிகள், கண்டுபிடிப்புக்கள், பிரபஞ்ச ஆராச்சிகள் இப்பூமிப்பந்தின் இயல்பை மெல்ல மெல்ல சீர்குலைக்க தொடங்கியது. மனிதகுல முன்னேற்றத்துக்கு என்று சொல்லி வளர்ந்த நாடுகள் போட்டி போட்டு பூமியை பாழ் படுத்தினார்கள்.

^^

அணுவை பிளந்து பூமியின் தோற்றம் குறித்து ஆய்வுகள் நடந்தன. சந்திரனுக்கு விண்கலம் செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எண்ணத்துடம் ஆய்வுகளும் ஆராச்சிகளும் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய விண்ணுக்கு சற்ரலைற்ருக்கள் அனுப்பி புரட்சி என்றும் திருப்பம் என்றும் சாதனை படைத்த மனிதன் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தடுமாறினான்.

தமது உற்பத்தி திறனை அதிகரிக்க விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மரபணு மாற்றம் செய்தான். விலங்குகளுக்கு மனித உடல் கழிவுகளை உணவாக கொடுத்தான். இதனால் மாட்டு நோய், பன்றிக்காச்சல், கோழிக்காச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. இதனால் பூமி பாழ்பட தொடங்கியது. அணுவாயுத ஆராய்ச்சிகள், மின்சாரம் பெற அணு உலைகள் என்றும் பூமி தன் இயல்பை இழந்தது. காலணி ஆதிக்கத்தில் இருந்த மனநிலையில் இருந்து இன்னும் விலகாத நாடுகள், இன்றும் உலகில் இருக்கின்றன. ஆபிரிக்க கண்டத்தில் இருந்து வளங்களை சுறண்டி தமது நாடுகளை வளப்படுத்தியவர்கள், வளங்களை சுறண்டிய நாடுகளில் தமக்கு விசுவாசமாக இருக்கும் ஆட்களை ஆட்சிக்கட்டிலில் இருக்க வைத்து ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்தார்கள். இன்றுவரை ஆபிரிக்க கண்டத்தில் கல்வி அறிவு அற்ற மக்களை அடக்கியாளும் அரசுகளும் அதற்கு துணை நிற்கும் மேற்குலகமும் இருக்கின்றன.

^l

உலகமயமாக்கல் என்றும் உலகம் ஒரு கிராமம் என்றும் சொல்லி கொம்யூனிசியத்துக்கு சாவுமணி அடித்தவர்கள், அடிமை நாடுகளின் கடற்பரப்பில் அணுவாயுதங்களை பரிசோதனை செய்தவர்கள், தம்மை வல்லரசுகளாக ஆக்கி கொண்டார்கள். வளங்கள் நிறைந்த நாடுகளின் ஜனநாயக விரோதப்போக்கும் குடும்ப ஆட்சியையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திய வளர்ந்த நாடுகள் உள்நாட்டுக் குழப்பங்களையும் புரட்சிகளையும் ஏற்படுத்தி அதன் மூலமாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வளங்களை சுரண்டவும் எதிர்பவர்களை தமக்கு சார்பாக மாற்றவும் முயற்சி செய்தார்கள். அதற்கும் பணியாதவர்கள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட விபத்துகளிலும் புரட்சிகளிலும் கொல்லப்பட்டார்கள். அல்லது, காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

கடன் கொடுத்து அடிமைப்படுதினார்கள். வளங்களை சுரண்டிய நாடுகளுக்கே சுரண்டிய வளங்களை கடனாக கொடுத்தார்கள். இந்தனையும் தமது சுயநலன் சார்ந்து வளர்ந்த நாடுகள் செயற்பட்டன. பனிப்போர் காலத்துக்கு பின்னர் நேரடி முரண்பாடுகளை தவிர்த்த வளர்ந்த நாடுகள், அறிவியல் போரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்கள். இதன் விளைவு ஓசோன் படலத்தில் ஓட்டை, காற்று மாசு, புவி வெப்பமாதல், நீர் தட்டுப்பாடு, கடல் மட்டம் உயர்வு போன்ற மாற்றங்கள் பூமித்தாயின் உடலில் ஏற்பட்டன. காலத்துக்காலம் ஏற்பட்ட இயற்க்கை பேரிடர்கள், கடல் கோள்கள், பூகம்பம், பூமி நடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றனவும் இப்பூமியில் தொடர்ந்து எற்பட்ட வண்ணம் தான் உள்ளன. இதற்கும் மனிதனின் பேராசை தான் காரணம்.

j

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஆழ் இல்லா உளவு விமானங்கள், இந்த உலகை பத்து தடவை அழிக்க வல்ல அணுவாயுதங்கள் என்றும் மனித உழைப்பை மதிக்காத இயந்திர மயமாதலும் இந்த பூமியின் இயல்பை சீர் குலைத்தது.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு என்று சொல்லி உலக நாகரிகத்தின் (மொசப்பத்தேமியா) தொட்டில் என்று சொல்லப்படும் ஈராக்கில் போர் தொடுத்து அதன் மக்களையும் கொன்று அதன் எரிபொருள் வளங்களை சுரண்டி அதன் அதிபரை தூக்கிட்டு கொன்று (சதாமை உருவாக்கியதே அமெரிக்க வல்லாதிக்கம் தான்) பின்னர் ஆப்கானிஸ்தானின் மலைகளில் கொட்டிக்கிடக்கும் அரிய கனிம வளங்களை கொள்ளையடிக்க அந்த நாட்டின் மீதும் போர் தொடுத்து (ஓசாமா பின்லேடன் அமெரிக்க ஜனாதிபதி றீகனின் காலத்தில் செல்லப்பிள்ளையாக உண்மையான ஆண்மகன் என்று றீகனால் புகழப்பட்டவர் - சோவியற்றுக்கு எதிரான போரில் உதவியதற்க்கு) தேடித்தான் ஆப்கானிஸ்தான் மீது கொடிய போரை தொடுத்தது. இதன் விளைவாக பல இலட்சங்களில் மக்கள் கொல்லப்பட்டார்கள். எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அநாதைகள் ஆக்கப்பட்டார்கள். இன்றுவரை அடுத்தவரின் தயவுக்காக காத்திருக்கும் போரும் பதட்டம்மும் நிறைந்த பூமியாக மாறிப்போனது அந்த நாடுகள், அத்தோடு நிறுத்திகொள்ளாமல் அரபிய பிராந்தியத்தில் இஸ்ரவேலுக்கு எதிரான நாடுகளை இலக்கு வைத்து அமெரிக்க ஏகாதுபத்தியம் தன் கரங்களை லிபியா மீது வைத்ததது.

l

எண்ணை வளம் நிறைந்த நாடு. ஆனால் லிபியா தனி ஒரு மனிதனால் நீண்டகாலம் ஆளப்பட்டு வந்தது (மேற்குலகால் நல்ல மனிதர் என்று புகழப்பட கேணல் கடாபி அவர்களால் தான் லிபியா ஆளப்பட்டது) இவரை மேற்குலகம் தலையில் வைத்து ஆடியது. தமது தேவை முடிந்ததும் லிபியாவில் இருந்து கடாபியை அகற்ற விரும்பியது. இதற்காக உள் நாட்டுக்குழப்பத்தை உருவாக்கி கடாபியை கொன்று அனைத்துலகின் வேட்டை காடாக மாற்றப்பட்டது லிபிய தேசம். இக்காலப்பகுதியில் உலகில் நடந்த தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமாக பார்த்து அவற்றை அழிப்பதற்கு அரச பயங்கரவாதத்துக்கு துணை நின்றது இந்த போலி மனிதம் ஜனநாயம் மனித உரிமை என்று பேசிய மேற்குலகுகள்.

பட்டுப்பாதை அமைத்து பாதுகாப்பான கடல் வழிப்பதை உருவாகிய சீனா வல்லரசு என்று சொல்லும் அமெரிக்காவையும் மேற்குலகையும் தன் பிடிக்குள் கொண்டுவர அணுவாயுதங்களுக்கு சமனாக உயிராயுதங்களை காலத்துக்கு காலம் உற்பத்தி செய்து பரீச்சுப்பார்த்தது வெளித்தெரியாமல் நடந்த இந்த விடையங்கள் கடந்த 2019 செப்டொம்பர் மாதம் உயிராயுத உற்பத்தி மையத்தில் இருந்து வெளியே வைரஸ் வந்தது ஊகாண் மாகாணம் தான் இந்த உயிராயுதம் உற்பத்தி செய்யப்படும் மையம் இம்மாகணத்தில் இருக்கும் மக்கள் இனம் புரியாத காச்சலால் தொடர்ந்து அவதிப்பட அந்த மாகாண மருத்துவமனை நோய்வாய்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை ஆய்ந்து அதிர்சியான அறிக்கயை சீன அரசுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இதனை பார்த்த சீன அதிகாரிகள் ஊகாண் மாகாண தலைமை மருத்துவரை எச்சரித்து செய்தி வெளியே போகாமல் பார்த்துக்கொள்ளுமாறும் பார்த்துக்கொண்டது, இதே நேரத்தில் அமெரிக்க பென்ரகனில் பணி புரியும் ஒரு பெண்மணிக்கு காச்சல் வர அவரையும் பரீச்சுப்பார்த்த அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி அவருக்கு கொடிய கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவை போல விடையம் வெளியே போகமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது. கொறோணோ தான் இந்த உயிர் கொல்லி என்று சீனாவின் ஊகாண் மாகாண மருத்துவமனை காலம் கடந்து செய்தியை வெளியே விட்டது. இதில் ஊகாண் மாகாண மருத்துவமனையில் இந்த நோயை கண்டு பிடித்த மருத்துவர் உட்பட ஏழு மருத்துவர்கள் பலியானதன் பின்னர்தான் சீனாவும் உலகமும் விழித்துக்கொண்டது.

j

சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இந்தக்கொறோணோ நோய் இப்போது உலகில் முதன்மையான நாடுகளை பாழாய் படுத்துகிறது. நாளும் பொழுதும் மரண எண்ணிக்கையும் நோய் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கையும் ஆயிரங்களை தாண்டி செல்கின்றன. கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசுகள் தவிக்கின்றன. வளர்ந்த நாடுகள் தமது இராணுவத்தேவைகளுக்காக செலவிட்ட பணத்தில் குறைந்த வீதத்தையே சுகாதாரத்தேவைக்கு முன்னர் ஒதுக்கி இருந்தார்கள். இதன் விளைவு பெருகிவரும் நோய் தொற்றாளர்களை பராமரிக்க இடம் இன்றி மருத்துவ உபகரணங்கள் இன்றி வல்லரசுகளே செய்வது அறியாது நிற்கின்றன.

இதில் வேடிக்கை என்ன வெனில் வளம் கொழித்த நாடுகளே இன்று திணறி நிற்கும்போது இலங்கை இந்தியா போன்ற அடிப்படைத்தேவைக்கே அல்லாடும் நிலையில் இருக்கும் நாடுகளில் நடக்கும் கூத்து சொல்லி மாளாது. இலங்கையில் அமைச்சர் சொல்கிறார் புலிகளை அழித்த எங்களுக்கு கொறோணோ ஒரு பொருட்டே இல்லை என்று. இலங்கையை பொறுத்தவரை கொறொணோவால் ஜெனிவாவில் வர இருந்த நெருக்கடியில் இருந்து தப்பித்ததுதான் மிச்சம்.

உலக வல்லாதிக்க சத்திகளின் துணையுடன் ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அழித்தவர்கள் இப்போது திமிராக கதைக்கிறார்கள். இந்தியாவோ தன் பொருளாதார தர இறக்கத்தையும் குடி உரிமைக்கு எதிரான போராட்டங்களையும் திசை திருப்ப கிடைத்த வாய்ப்பாக இந்த பேரிடரை (உள்@ர சீனாவுக்கு நன்றி சொல்லியபடி) பயன்படுத்தி கொள்கின்றது.

f

வளர்ந்த நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி பற்றிய பேச்சு இன்றி பிணங்களை என்ணும் வேலைதான் செய்கின்றார்கள். இதற்கு இடையில் இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தை எப்படியாவது நிமிர்த்தி விடவும் வல்லரசு என்ற இலக்கை அடையவும் காய்களை நகர்த்த தொடங்கி இருப்பதாகத்தான் தெரிகின்றது. ஏன் எனில் கொறோனோ தாக்கத்துக்கு இலக்கான நாடுகளுக்கு மருந்து தருவதாக சொல்லி சில விடயங்களை சாதிக்க நினைக்கின்றது. அமெரிக்காவும் மிரட்டி பார்க்கிறது. இந்தியாவை உலகில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு என்ற வகையிலும் கொறோனாத் தொற்று அதிகம் பரவமால் இருப்பதாலும் தற்போதைக்கு வரும் சவால்களை இலகுவாக எதிர்கொள்ளும்.

இதேநேரத்தில் அமெரிக்க அதிபரும் சீனாவோடு நேரடியாக மோதாமல், உலக சுகாதார மையம் சீனாவுக்கு சார்பாக நடப்பதாக குற்றம் சாட்டுகிறார். கொறோணா தொற்றுப்பரவல் பற்றிய விடையத்தை காலம் தாழ்த்தி தமக்கு சொன்னதாகவும் கண்டித்ததோடு, உலக சுகாதார மையத்துக்கு நாம் வளங்கும் நிதியைகூட நிறுத்தப்போவதாக மிரட்டுகிறார். இதேநேரத்தில் சீனா கொறோணாவின் பாதிப்பில் இருந்து மீண்டு தன் இயல்பு வாழ்க்கைக்குள் (ஊகாண் மாகாணம் உட்பட) வந்து தன் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப தொடங்கி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் நோய் தொற்றை கொடுத்து அவற்றை சீர்குலைத்து பொருளாதாரத்தில் நலிவடைய வைத்து தன் இலக்கு நோக்கி (முத்துமாலையை முழுமையாக கட்டி முடிக்க) வேகமாக நகர்கிறது. கிடைத்த சந்தர்பத்தை சரியான இலக்கில் கொண்டு போக வேண்டும் என்பதில் கண்ணாக இருக்கின்றது. சீனாவுக்கு நன்கு தெரியும் இந்த கோறோணா விவகாரம் முடிவுக்கு வர உலக நாடுகள் தன் மீது சில கெடுபிடிகளை காட்டலாம், மிரட்டலாம். வெளிநாடுகளில் தான் முதலீடு செய்து வைத்திருக்கும் வளங்களுக்கு ஆபத்து வரலாம் (நிச்சயம் அமெரிக்க வஞ்சம் தீர்க்கும்) அதற்கு இடையில் தன்னை பலப்படுத்த சகல வழிகளையும் நாடும். எப்படியும் வரும் யூலைக்கு முதல் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இயல்பு நிலைக்கு வராது என்பதால், நம்பிக்கையோடு காய்களை நகர்த்தும். ஐரோப்பிய நாடுகளின் கோபத்தை தணிக்க முககவசங்களையும் மருந்துகளையும் மருத்துவர்களையும் இலவசமாகவும் கொடுத்தும் சமாளிக்க முற்படுகின்றது.

இப்போது தான் எங்கள் தலைவரின் தீர்க்க தரிசனம் எம் கண் முன்னே தெரிகின்றது. நாம் வாழும் நாட்டில் தன்னிறைவுப் பொருளாதாரம் உள்@ர் உற்பத்தி போன்ற விடயங்களில் வரும் காலத்தில் நாம் கவனம் செலுத்தப்போகின்றோம் என்று பிரஞ்சு அரசே சொல்கின்றது. காரணம் எல்லைகளை மூடி நோய் தொற்றை குறைக்க முற்படுகையில் வெளியே இருந்து வரும் பொருட்களுக்கு தட்டுப்பாடு வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்த உணவுப்பொருட்கள், பழ வகைகள், மலர்கள் போன்றவை உள்ளிருப்புக்காலத்தாலும் போதிய தொழிலாளர் இன்மையாலும் அறுவடை செய்யமலேயே அழிந்து போகின்றன (போதியம் ஊதியம் கொடுக்கப்படாததால் வெளிநாட்டவர்களே குறிப்பாக போர்த்துக்கல், போலந்து போன்ற நாடுகளின் தொழிலாளர்களே தோட்டங்களின் வேலை செய்தார்கள்.

இதனால் மக்களின் வெறுப்பை ஆட்சியாளர்கள் சந்திக்க வேண்டி உள்ளது இதை தவிர்க்க எதிகாலத்தில் இப்படியான நெருக்கடிகள் வரும் போது எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் சுய பொறுளாதாரம் குறித்து நிச்சயம் நகர்வுகளை தொடங்கு என்று நம்பலாம். இத்தோடு மட்டும் நின்று விடாது இந்தக் கொறோணா உலக ஒழுங்கில் பாரிய மாற்றங்களை உருவாக்கப்போகின்றது. இதில் பிரதானமாக நாடுகளின் தனித்துவம் குறித்த சிந்தனை தொடர்பான கருத்துருவாக்கம் நிச்சயம் தோன்றும்.

சில நேரங்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் உடைவுகள் கூட வரலாம். இப்போதே அதற்கான சமிக்கைகள் தோன்ற தொடங்கிவிட்டன. இத்தாலியும், நெதர்லாந்தும், ஸ்பெயினும் தமக்கான பொருளாதார உதவிகள் கிடைக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதில் அர்தம் இல்லை என்னும் தொனியில் கருத்தை சொல்லியுள்ளன. நோய் தொற்றால் சாவு எண்ணிக்கை நாளும் பொழுதும் உயர்ந்து கொண்டே போகின்றது. வல்லாண்மை நாடுகள் செய்வதறியாது சொந்த மக்களின் சாவை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

இதில் தான் எமக்கான ஒரு செய்தி உள்ளது. உலகம் பூராவும் பரந்து வாழும் ஈழத்தமிழ் இனம் தன் பலத்தையும் பொருளாதார வளத்தையும் அறிவாற்றலையும் ஒருங்கிணைத்து வர விருக்கும் புதிய உலக ஒழுக்கில் தன்னையும் இணைத்து பயணித்து தன் இன விடுதலையை அடைய வேண்டும். மே 18 அதாவது 2009 இல் எம் தாயக விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு பதினொரு வருடங்கள் ஆகின்றது. இம்முறை எம்முறவுகளை நினைத்து பொது வெளியில் நிகழ்வுகள் சாத்தியம் அற்றதாகவே இருக்கும். இவ்வளவு காலமும் காலத்துக்காலம் அதுவாக தந்த சந்தர்பங்களையும் சரியாக பயன்படுத்தாமலும் தமக்குள்ளே பதவிகளுக்கும் பகட்டுக்கும் முட்டி மோதி இன விடுதலை நெருப்பை மூசி எரிய விடாமல் தடுத்து அழிக்க நினைத்து துரோகம் செய்து அதற்கு துணை நின்று உதவியவர்களும் புலம்பெயர் கட்டமைப்புக்களை சீர்குலைத்து சிங்களவனுக்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கும் துணை நிற்கும் எல்லோரும் இனியாவது மகத்தான மாவீரர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது ஒதுங்க வேண்டும். புலம்பெயர் கட்டமைப்புக்களின் மேய்ப்பர்கள் என்று தம்மை பிரகடணப்படுத்தியவர்களும் கடந்த காலத்தில் இருந்து பாடங்களை கற்று தவறுகளை ஏற்றுக்கொண்டு காலத்துக்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

புலம்பெயர் கட்டமைப்புக்களில் இளையோர் தலைமை தாங்க வேண்டும். ஏன் எனில் 2008ல் எம் தேசியத் தலைவர் ஆற்றிய மாவீரர் உரைக்கு வடிவம் கொடுக்கும் காலம் வர இருக்கும் புதிய ஒழுங்கில் நிச்சயம் வரும். அதை இளையோர்தான் செய்வார்கள். செய்ய வேண்டும். புதிய சிந்தனையும் ஆற்றலும் அவர்களை வழி நடத்தும். அதற்கு மாவீரர் துணை இருப்பர்.

- வண்ண நிலவன்