மனமுடைந்து வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் தற்கொலை!!

ஞாயிறு மே 17, 2020

யாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் அந்த யுவதி சில காலத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த இளைஞர் மனமுடைந்து வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7-00 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டில் வீபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்
யாழ் கந்தரோடையைச் சேர்ந்த 26 வயதான பாலசிங்கம் சசிகரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.