மன்னராட்சிக்குள் வீழ்ந்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! புதிய பிரதமராக யாழ்ப்பாண இளவரசர் றெமீடியஸ் கனகராஜ் நியமனம்!

வியாழன் ஜூலை 11, 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் சிங்களக் கைப்பாவையான கே.பி உருவாக்கிய கனவுலக அரசாங்கம் மன்னராட்சிக்குள் வீழ்ந்துள்ளது.

இக் கனவுலக சாம்ராச்சியத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் தற்பொழுது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாற்று அணி என்ற போட்டிக் கனவுலக சாம்ராச்சியத்தை உருவாக்கி, அதன் பிரதமராக யாழ்ப்பாண இராச்சியத்தின் இளவரசர் என்று கூறிக்கொள்ளும் றெமீடியஸ் கனகராஜ் என்பவரை நியமித்துள்ளார்.

இதன் மூலம் இதுவரை காலமும் ஒரு கோமாளி அமைப்பாக இயங்கி வந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு, இப்பொழுது முழு அளவிலான விகடகவி அமைப்பாக மாற்றமடைந்துள்ளது.

Jaffna Prince

இக் கனவுலக சாம்ராச்சியத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் கனகராஜ் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறையாண்மையை போர்த்துக்கேயர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்த இமெல்டா சகோதரிகளின் வம்சத்தைச் சேர்ந்த இளவரசராவார்.

Jaffna2

இவர் சிங்கள அரசாங்கத்தோடு நெருங்கிய உறவைப் பேணி வருவதோடு, சிங்கக் கொடியின் கீழே நிற்பதைப் பெருமையாகக் கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.