மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் சில கோளாறுகள்

செவ்வாய் மே 28, 2019

பல முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய கைப்பேசிகளை போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கியுள்ளன. இப்படியிருக்கையில் சாம்சுங் நிறுவனம் தான் வடிவமைத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் சில கோளாறுகள் இருப்பதை கண்டறிந்தது.

இதனை அடுத்து குறித்த குறைபாடுகளை நீக்குவதில் மும்முரமாக களமிறங்கியிருந்தது. தற்போது குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட குறித்த கைப்பேசியானது விற்பனைக்கு தயாராகவுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலையானது ஏறத்தாழ 2000 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.