மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் கோத்தாபய சந்திப்பு!

திங்கள் டிசம்பர் 09, 2019

பொருளாதார மேம்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவிற்கு  தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கின்றனர். 

இன்று (09.12.2019 சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பின் போதே, தூதுவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அத்தோடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவினை வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த இச்சந்திப்பில் ஓமான், பலஸ்தீன், ஈராக், எகிப்து, குவைத், லிபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின்சிறிலங்காவுக்கான தூதுவர்கள் கலந்து கொண்டனர்.