மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக மஹிந்த!

வெள்ளி பெப்ரவரி 21, 2020

நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடன் இலங்கை நாணயச் சபை 2020 பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.மஹிந்த சிறிவர்தனவை நியமித்துள்ளது.

 மஹிந்த சிறிவர்தன மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சி துறை மற்றும் புள்ளிவிவரத் துறைக்கும் பிரதி ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

 அத்துடன் அவர் வங்கி கட்டுப்பாட்டாளரின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.