மதுபான நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

 இலங்கை முழுவதும்  மதுபான நிலையங்கள் சிலவற்றை சீல் வைத்து மூடியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சில மதுபான நிலையங்களின் உரிமையாளர்கள், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மதுபானங்களை வேறு இடங்களுக்குக் கொண்டுச் சென்று, அதிகம் விலைக்கு விற்பதாக, கிடைத்த முறைப்பர்டுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக,கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.