முள்ளியவளையில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட மூவர் கைது!

ஞாயிறு மே 17, 2020

முல்லைத்தீவு வனவளத்திணைக்களத்தின் எல்லைக்கு உட்பட்ட குமுழமுனை ஆண்டான் குளம் காட்டு;ப்பகுதியில் இரவு வேளை சட்டவிரோத துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுளைந்த இருவர் கடந்த 14.05.2020 அன்று வனவளத்திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை பிரதேசத்தில் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட வேளை வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டினை வெட்டி காணி பிடிக்க முற்பட்ட இருவர் மீது முல்லைத்தீவு வனவளத்திணைக்களத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் அதில் ஒருவர் 16.05.2020 அன்று கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மாமூலை கயட்டையடிப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளை இரண்டு நபர்கள் அரச காட்டுப்பகுதியினை துப்பரவு செய்து காணிபடிக்க முனைத்துள்ள சம்பவம் தொடர்பில் வனவளத்திணைக்களத்தினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக வனவளத்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.